வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே / Vetrikku Vitthidum Asiriyargale
‘வித்யா தானம் மஹா தானம்’ என்பது நம் பாரம்பரியம். ஆனால் இன்றைய கல்விச் சூழ்நிலை வணிகமயமாக்கப்பட்டு, மதிப்பீடுகளை (Values) மறந்து மதிப்பெண்களை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. மேலும், இன்று தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வி என்பது வெறும் தகவல் பரிமாற்றம் என்ற தவறான கருத்தை முன்வைக்கிறது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள கல்வியாளர்களும் துறவிப் பெருமக்களும், தங்கள் சிந்தனைகளை இந்நூலில் கட்டுரைகளாக பகிர்ந்துள்ளனர். இவற்றைச் செயல்படுத்தி, உயர் கலாச்சாரம், பண்பாடு, மற்றும் ஆன்மீக வளர்ச்சியை உருவாக்கும் கல்வியைக் கட்டமைப்போம், வாருங்கள்!