‘இந்தியாவில் பெண்மையின் லட்சியம் தாய்மை. அற்புதமான, தன்னலமற்ற, துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிற, என்றும் மன்னிக்கும் இயல்புடையவள் தாய்!’ என்று தாயின் பெருமைகளை சுவாமி விவேகானந்தர் அடுக்கிக் கொண்டே போகிறார்.
அன்பைப் பொழிந்து சரித்திரம் படைத்த தாய்மார்கள் பலர். அவர்களது சிறப்பினை விளக்கும் சம்பவங்கள், அன்னை ஸ்ரீசாரதாதேவியின் பேரன்பைப் போற்றும் நிகழ்ச்சிகள், ஒருவர் சிறந்த தாயாக மலர்வதற்கான வழிகள் போன்ற பல அரிய விஷயங்களைத் தருகிறது இந்த நூல். இவை இன்றைய காலத்திற்குத் தாய்மையின் லட்சியத்தை மீண்டும் நிலைநாட்ட உதவுகின்றன.