இன்று நம் நாடு வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு ‘இளைஞர்கள்’ என்ற ஒரு பெரும் செல்வத்தைக் கொண்டிருக்கிறது. இளைஞர்க்களிடமே தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தேவையான அளப்பற்ற ஆற்றல் அடங்கிக் கிடக்கிறது. அந்த ஆற்றலைத் தட்டி எழுப்புவதற்கான முயற்சியே ‘எழுச்சி பெறு யுவனே!’ என்னும் இந்நூல்.
இதில் இன்றைய யுவனும் யுவதியும் அவசியம் மனதில் கொள்ள வேண்டிய நம்பிக்கை விதைகள், சாதிப்பதற்கான பயிற்சிகள், சாதனையாளர்களின் அனுபவங்கள், இவற்றுக்கும் மேலாக இளைஞர்கள் தம்மைப் பற்றித் தாமே உணர வேண்டிய இளைஞர் சக்தி குறித்த பல சுவையான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.