தற்கால இளைஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். தன் படைப்புகளின் மூலம் எண்ணற்ற இளைஞர்களின் மனதில் தேசப்பற்றை விதைத்து, அதன் வளர்ச்சிக்குப் பாடுபடுபவதற்கான உத்வேகத்தை அளித்தவர் அவர்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் - மிஷனிலும் மற்ற பல இடங்களிலும் அவர் ஆற்றிய எழுச்சி மிகு உரைகளைத் தொகுத்து வழங்குகிறது இந்நூல். இதில் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பண்பாடு, சுற்றுப்புறச் சூழல், விஞ்ஞான வளர்ச்சி, சமுதாய - நாட்டு நலன் போன்ற கருத்துக்களை டாக்டர் கலாம் அள்ளி வழங்கியுள்ளார்.